உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நான்கு மாதங்களுக்கு பின் நடந்த ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம்

நான்கு மாதங்களுக்கு பின் நடந்த ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் 4 மாதங்களுக்கு பின் நேற்று நடந்தது. ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க., 8, அ.தி.மு.க.,6, இந்திய கம்யூ.,1, மார்க்சிஸ்ட் கம்யூ.,1, வி.சி.க., 1 கவுன்சிலர்கள் உள்ளனர். 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் இறந்ததால் அந்த இடம் காலியாக உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த சந்திரகலா தலைவராகவும் ஜோதி துணை தலைவராகவும் உள்ளனர். தலைவருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆக., 22ல் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. செப்.22 ல் நடந்த கூட்டமும் கோரமின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 4 மாதத்திற்குப் பின் நேற்று நடந்த பேரூராட்சி கூட்டத்திற்கு தலைவர் சந்திரகலா தலைமை, செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் முன்னிலை வகித்தனர் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பட்டியலிட்டு தேவையான நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தினர். பேரூராட்சியின் நிதிநிலையைப் பொறுத்து அனைத்து வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !