உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

மூணாறு : தேவிகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர்.மூணாறு அருகில் உள்ள தேவிகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலம் தரம் பிரிப்பதற்கான ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்வோரிடம் பெரும் தொகை லஞ்சமாக பெறப்பட்டு பணிகள் நடப்பதாக புகார் எழுந்தது. அதற்கு தேவிகுளத்தை மையப்படுத்தி செயல்படும் சில ஏஜென்ட்டுகள், கோட்டாட்சியர் அலுவலகத்தில் சில அதிகாரிகள், ஊழியர்கள் உடந்தையாக செயல்படுவதாகவும், தொகை வழங்காதவர்களின் ஆவணங்கள் கிடப்பில் போடப்பட்டு அலைக்கழிக்கப்படுவதாகவும் கருதப்பட்டது.சோதனை: இடுக்கியைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆறு பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திடிரென சோதனையில் ஈடுபட்டனர். காலை 10:00 மணிக்கு துவக்கிய சோதனை மாலை வரை நடந்தது. அதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.லஞ்ச ஒழிப்புதுறை சோதனையின் போது சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் விடுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை