உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தீண்டாமை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்

தீண்டாமை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்

தேனி: பெரியகுளம் தாலுகா குள்ளபுரத்தில் பொதுப்பாதையில் தலித் மக்கள் செல்ல அனுமதி மறுப்பதை கண்டித்து தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் இளங்கோவன், கணேசன், முத்துராணி, செல்லக்கண்ணு, தர்மர், மா.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் ராமசந்திரன், வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !