வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அலுவலர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டுள்ளது.மாவட்டத்தில் கம்பம், போடி சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அலுவலராக உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., இருந்தார். ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) சட்டசபை தொகுதிகளுக்கு வாக்காளர் பதிவு அலுவலராக பெரியகுளம் சப்கலெக்டர் இருந்தனர்.இந்நிலையில் வாக்காளர் பட்டியல்தீவிர சுருக்க திருத்தப் பணிகளை கண்காணிக்கும் வகையிலும், பெயர் சேர்த்தல், நீக்குதல், பிழை திருத்தம், டிஜிட்டல் கார்டுமாற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கான தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்ஜீத்சிங் உத்தரவில் பெரியகுளம் (தனி) தொகுதிக்கு வாக்காளர் பதிவு அலுவலராக சப்கலெக்டர் ரஜத்பீடன் (94450 00451), ஆண்டிபட்டி தொகுதி வாக்காளர் பதிவு அலுவலராக மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் சாந்தி (89031 11328),போடி தொகுதி வாக்காளர் பதிவு அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி (94450 00329), கம்பம் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலராக உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகம்மது (94450 00452) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வாக்காளர்கள் தங்களதுவாக்காளர் பட்டியல் தொடர்பான குறைகளை எழுத்துப்பூர்வ விண்ணப்பங்களாக ஆதாரங்களுடன் வழங்கி தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.