மாணவிகளுக்கு பாராட்டு விழா
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி திரவியம் கல்வி நிறுவனங்களின் சார்பில், மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், மாணவிகளுக்கு பாராட்டு விழா திரவியம் கல்லூரியில் நடந்தது. தாளாளர் டாக்டர் பாண்டிராஜ் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் ஹேமலதா முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் ரீனா வரவேற்றார். வர்த்தக பிரமுகர் ஜெகன், அருட்சகோதரிகள் அக்சிலியா ஆண்டனி, ரோஜா மணி, மேரிகுட்டி சகோ ஆகியோர் மாணவர்கள், மாணவிகளுக்கு கேடயம் வழங்கினர். திரவியம் கல்வி நிறுவனங்களின் அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ராமதிலகம் நன்றி கூறினார்.-