உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா

உத்தமபாளையம்: தேனியில் செப்.,10 முதல் 24 வரை மாவவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பிரிவில் உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரி மாணவர்கள் வாலிபால், ஹாக்கி, கேரம், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். அதில் 26 தங்கம், 20 வெள்ளி, 40 வெண்கல பதக்கம் வென்றனர். கல்லுாரியில் நடந்த விழாவில் வெற்றி பெற்ற மாணவர்கள், உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி ஆகியோரை கல்லூரி தாளாளர் தர்வேஷ் முகைதீன், ஆட்சி மன்ற குழு தலைவர் நத்தர் மீரான், முதல்வர் முகமது இஸ்ஹாக் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி