விவசாயிக்கு பாராட்டு விழா
தேனி: போடியை சேர்ந்த விவசாயி முருகன். இவர் பனை விதைகள் நடவு செய்ய இலவசமாக வழங்கி வருகிறார். ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிகு ஓடை கண்மாய் கரைகளில் நடுவதற்காக 2ஆயிரம் பனை விதைகளை 2021ல் வழங்கி இருந்தார்.இவருக்கு முத்துத்தேவன்பட்டி டி.கே.வி., கல்வி வளர்ச்சி அறக்கட்டளை, ஊஞ்சாம்பட்டி காமாட்சி அம்மன் பொது நில தொண்டு நிறுவன விவசாயிகள் சங்கம் சார்பில் கண்மாய் கரையில் பாராட்டு விழா நடந்தது. ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் முத்துலட்சுமி, அறக்கட்டளை நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க நிர்வாகி கருப்பசாமி , ஆர்.வி.எஸ்., தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கரையில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.