மாணவிகளுக்கு பாராட்டு
தேனி : தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கபீனா அமல்ஸ், ஷிவானிஸ்ரீ, சக்திஸ்ரீ, சுபமதி, சாதான ஆகியோர் பங்கேற்றனர். அவர்களின் கண்டுபிடிப்பான அக்குபஞ்சர் காலணிகள் மாநில அளவில் 3ம் இடம் பிடித்தன. கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகளை பாராட்டிய கலெக்டர் ரஞ்ஜீத்சிங், அவர்களுக்கு ரூ. 25 ஆயிரத்திற்கான காசோலை, சான்றிதழ் வழங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.