உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் ரூ.6 கோடியில் நவீன கூட்ட அரங்கத்திற்கு அனுமதி

மூணாறில் ரூ.6 கோடியில் நவீன கூட்ட அரங்கத்திற்கு அனுமதி

மூணாறு: சுற்றுலா நகரான மூணாறில் ரூ.6 கோடி செலவில் அதி நவீன வசதிகளுடன் கூட்ட அரங்கம் கட்டப்படும், என தேவிகுளம் எம்.எல்.ஏ.ராஜா தெரிவித்தார். உள்ளூர் வளர்ச்சி திட்ட நிதி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எம்.எல்.ஏ., கூறியதாவது: பழைய மூணாறு, லெட்சுமி ரோட்டில் ஊராட்சி வழங்கிய இடத்தில் 600 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கம் கட்ட அரசு அனுமதி வழங்கியது. ரூ.6 கோடி செலவில் அதி நவீன வசதிகளுடன் அரங்கம் கட்டப்படும். இடுக்கியில் நடந்த நிலப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் தேவிகுளம் தொகுதியில் 322 பேருக்கு நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டன. குட்டியாறுவாலி, சான்டோஸ் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு ஜனவரியில் நிலப்பட்டாக்கள் வழங்கப்படும். மூணாறு நகரில் ஜி.எச். ரோட்டை சீரமைக்க ரூ.20 லட்சம், லெட்சுமி எஸ்டேட் பாக்டரி, மிடில் டிவிஷன் ரோட்டிற்கு ரூ.24 லட்சம், கல்லார் எஸ்டேட் புதுக்காடு ரோட்டிற்கு ரூ.20 லட்சம், 2018ல் வெள்ளப் பெருக்கில் பழைய மூணாறில் சேதமடைந்த தொங்கு பாலத்திற்கு பதில் புதிய தொங்கு பாலம் அமைக்க ரூ.1.16 கோடி, மாட்டுபட்டி டாப் டிவிஷன் ரோட்டிற்கு ரூ.25 லட்சம், செண்டுவாரை டாப், நெற்றிகுடி டாப் ஆகிய ரோடுகளுக்கு தலா ரூ.24 லட்சம், தேவிகுளம் அரசு ஆரம்ப பள்ளியில் திறந்த வெளி அரங்கம் அமைக்க ரூ.20 லட்சம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ