உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / யாசகம் பெறும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு

யாசகம் பெறும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு

தேனி: மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் யாசகம் பெறும் குழந்தைகள், யாகசம் பெறுவோருடன் சுற்றும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடுகள் நடந்து வருதாக குழந்தைகள் நலத்துறையினர் தெரிவித்தனர்.மாவட்டத்தில் பல்வேறு பஸ் ஸ்டாண்டுகள், கடைவீதிகளில் குழந்தைகளை வைத்தும், சில குழந்தைகளும் யாசகம் பெறுவது தொடர்கிறது. இவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து செல்ல குழந்தைகள் நலத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். குழந்தைகளை வைத்து யாசகம் பெறுதல், குழந்தைகள் எங்கேயும் துன்புறுத்தப்பட்டால் 1098 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் பற்றி யாரிடமும் தெரிவிக்கப்படாது என குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை