இலவச மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு
தேனி: ''விவசாயிகள், கல்வி நிறுவனங்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்க தயார் நிலையில் உள்ளது.'' என, வைகை அணை அருகே உள்ள வன விரிவாக்கத்துறை சரக அலுவலர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப் பன்மை பாதுகாப்பு, பசுமையாக்கும் திட்டத்தில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இலவச மரக்கன்றுகள் விவசாயிகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் பெற்றுக் கொள்ளலாம். வழங்குவதற்காக வேம்பு, பாதாம், நீர்மருது, ஆல்அத்தி, அரசு, குமிழ், தேக்கு, கொய்யா, பலா, மகாகனி மரக்கன்றுகள் தயாராக உள்ளன. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 400 மரக்கன்றுகள் வழங்கப்படும். விவசாய நிலங்களில் நடவு செய்ய பட்டா, சிட்டா நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 88707 34349 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்., என்றார்.