உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் கலை விழா

கல்லுாரியில் கலை விழா

போடி : போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லுாரியில், 'கார்டோ கேம்ப்' கலை விழா நடந்தது. தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவக்குமார், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சொரூபன், ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அலமேலு வரவேற்றார். பேச்சு திறன், எழுத்து, கற்பனை, நடிப்பு, நடனம் உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன. 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் மங்கை, சிவா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ