உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சேட்டா என அழைத்த சுற்றுலா பயணிகளை விமர்சித்த ஏ.எஸ்.ஐ.

 சேட்டா என அழைத்த சுற்றுலா பயணிகளை விமர்சித்த ஏ.எஸ்.ஐ.

மூணாறு: ' சேட்டா' என அழைத்த சுற்றுலா பயணிகளை பணியில் இருந்த ஏ.எஸ்.ஐ., கடுமையாக விமர்சித்தார். மூணாறில் நேற்று முன்தினம் காலை நகரின் மையப் பகுதியில் ஏ.எஸ்.ஐ., ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கொச்சியில் இருந்து இரண்டு டூவீலர்களில் வந்த சுற்றுலா பயணிகள் ஏ.எஸ்.ஐ.யிடம் 'சேட்டா' இங்கு டூ வீலர்களை நிறுத்தலமா என கேட்டனர். மலையாளத்தில் சேட்டா என்றால் அண்ணன் என அர்த்தம். அண்ணன் என அழைத்ததை விரும்பாத ஏ.எஸ்.ஐ., நீங்கள் கேரளா தானே என கேட்டு தான் ஒரு போலீஸ் அதிகாரி என கூறி சார் என அழைப்பதை விட்டு சேட்டா என ஏன் அழைத்தீர்கள் என கடுமையாக விமர்சித்தார். ஏற்கனவே மழை பெய்ததால் அதில் நனைந்து நடுங்கியவாறு இருந்த பயணிகள் எதுவும் பேசாமல் நழுவினர். சுற்றுலா நகரான மூணாறுக்கு பல மொழிகள் பேசும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களிடம் அனைவரும் சுமூகமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் போலீசாரே வரம்பு மீறி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ