உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சியில் முறைகேடு உதவி இயக்குனர் ஆய்வு

ஊராட்சியில் முறைகேடு உதவி இயக்குனர் ஆய்வு

மூணாறு, : மூணாறு ஊராட்சியை கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ், இடது சாரி கூட்டணிகள் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது காங்கிரஸ் வசம் ஊராட்சி உள்ளது. இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் ஊராட்சியில் குப்பை அகற்றல், பழைய மூணாறில் அப் சைக்கிள் பார்க் அமைத்தல், நகரை அழகு படுத்தல் உள்பட பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் செய்ததாக புகார் எழுந்தது. அதனை குறித்து ஊராட்சி உதவி இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் ஊராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். அதில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தெரியவந்தது. அதனால் முறைகேடுகளில் தொடர்புடைய பலர் சிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை