உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து உதவி இயக்குனர் எச்சரிக்கை

உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து உதவி இயக்குனர் எச்சரிக்கை

தேனி: 'உரக்கடைகளில் எம்.ஆர்.பி., விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்.' என, வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் திலகர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: உரங்கள், மருந்துகள் விற்பனை செய்பவர்கள் அதற்கான உரிமம் இன்றி விற்பனை செய்யக்கூடாது. உரங்கள், மருந்துகளை எம்.ஆர்.பி., விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனைக்கு செய்தால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகள் பயிர்களுக்கு யூரியா பயன்பாட்டை குறைத்து காம்ப்ளக்ஸ் உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் பயிர் பாதுகாப்பு அதிகரித்து, உற்பத்தி செலவு குறையும்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !