ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்
மூணாறு:மூணாறு அருகே கே.டி. எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட், டாப் டிவிஷனைச் சேர்ந்த தொழிலாளி கனகராஜ் 50, நகரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது ஆட்டோ, வேறொரு ஆட்டோவில் லேசாக உரகியது. அது தொடர்பாக கனகராஜிக்கும், நல்லதண்ணி எஸ்டேட்டை சேர்ந்த சதீஷ் 40, க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சதீஷ் ஆயுதத்தால் கனகராஜை தாக்கினார். அதில் பலத்த காயம் அடைந்த கனகராஜ் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மூணாறு போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சதீஷை தேடி வருகின்றனர்.