உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சுற்றுலா பயணி மீது தாக்குதல்

 சுற்றுலா பயணி மீது தாக்குதல்

மூணாறு: கேரளா, கொல்லம் ஆயூரை சேர்ந்தவர் ஷாம்நாத்உசேன் 33. இவர், நண்பர்கள் நான்கு பேருடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு மூணாறு தபால் அலுவலகம் ஜங்ஷனில் உள்ள கையேந்தி பவனில் உணவு அருந்த சென்றனர். அங்கு உணவு ஆர்டர் செய்து விட்டு நீண்ட நேரம் காத்திருந்தும் உணவு கிடைக்கவில்லை. அது குறித்து கையேந்தி பவன் ஊழியரிடம் கேட்டனர். அதனால் ஊழியருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஊழியர் இரும்பு கரண்டியால் சுற்றுலா பயணிகளை தாக்கினார். அதில் ஷாம்நாத்உசேன் பலத்த காயமடைந்தார். அவரை மூணாறு டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ