உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூதாட்டியிடம் வீடு புகுந்து தங்கச் செயின் பறிக்க முயற்சி

மூதாட்டியிடம் வீடு புகுந்து தங்கச் செயின் பறிக்க முயற்சி

தேனி: தேனி அருகே பூதிப்புரம் எஸ்.வி.பிள்ளைத் தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி சரோஜா 65. ஓய்வு பெற்ற சத்துணவு மேற்பார்வையாளர். தனித்தனியாக வசிக்கின்றனர். தனியாக வீட்டில் இருந்த சரோஜா ஜன.26ல் காலை சமையல் அறையில் பாத்திரங்களை கழுவு சென்றார். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் பரமன் மகன் முருகன் அத்துமீறி வீட்டில் நுழைந்தார்.சரோஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்து செல்ல முயற்சித்தார். அப்போது சரோஜா கூச்சலிட்டதால், முருகன் அங்கிருந்து தப்பி ஓடினார். விரல் ரேகை பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்தனர். சரோஜா புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !