உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏலத்தோட்ட தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தை

ஏலத்தோட்ட தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தை

கம்பம்: ஏலத் தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டிற்கான போனஸ் பேச்சுவார்த்தைகள் ஐந்து முறை நடந்தும் முடிவு எட்டவில்லை. இதனால் ஏப். 22 ல் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது.கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.இந்தியாவிலேயே அதிக பரப்பில் ஏலக்காய் இங்கு சாகுபடியாகிறது.ஏலத் தோட்டங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு மட்டும் ஆண்டும்தோறும் தொழிலாளர் நலச் சட்டப்படி போனஸ் வழங்கப்படுகிறது.போனஸ் பேச்சுவார்த்தைகள் மார்ச்சில் துவங்கி பல கட்டங்களாக நடைபெறும். ஏல விவசாய சங்க பிரதிநிதிகளும், தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்பார்கள்.இந்தாண்டிற்கான போனஸ் பேச்சுவார்த்தை கடந்த மார்ச் முதல் 5கட்டங்களாக நடந்துள்ளது. விவசாய சங்கங்களுக்கும், யூனியன்களுக்கும் இடையே முடிவுஎட்டப்படவில்லை.ஆறாவது முறையாக ஏப். 22 ல் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. கடந்தாண்டு 13.5 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளது .ஆனால் இந்தாண்டு விளைச்சல், விலை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் குறைந்தபட்ச போனஸ் தான் வழங்க முடியும் என்று விவசாய சங்கங்களின் சார்பில்கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி