உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டில் குப்பையை எரித்து விழிப்புணர்வு

ரோட்டில் குப்பையை எரித்து விழிப்புணர்வு

தேனி : தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலெக்டர் அலுவலகம் அருகே குப்பைக்கு தீ வைத்தால் மக்கள் அவதியடைந்தனர்.அரசு துறைகள், கல்வி நிலையங்கள் சார்பில் செப்.,14 முதல் அக்., 1 வரை துாய்மை சேவை நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை ரோட்டில் கலெக்டர் அலுவலகம் அருகே துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பஸ் ஸ்டாப்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. அதனை அருகில் புற்கள் நிறைந்த பகுதியில் கொட்டி தீவைத்தனர். இதனால், கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே குப்பை எரிந்தன. விழிப்புணர்வு என்ற பெயரில் குப்பையை எரித்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை