மேலும் செய்திகள்
முடுதுறை ஊராட்சியில் 1,000 பனை விதைகள் நடவு
22-Sep-2025
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே லட்சுமிபுரத்தில் பனை விதைகள் நடவு செய்து பனை மரங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆண்டிபட்டி வாசவி கிளப், அற நல்லுலகம் அறக்கட்டளை, லட்சுமிபுரம் பொது மக்கள் இளைஞர்கள் சார்பில் பனை விதைகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் வரதராஜன், முன்னாள் ஆசிரியர் ஜெயபால் ஆகியோர் தலைமை வகித்தனர். வாசவி கிளப் தலைவர் பால மைத்ரேயி, அற நல்லுலகம் அறக்கட்டளை தலைவர் ஜெய வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, காளியம்மன் கோயில் வளாகங்கள், லட்சுமிபுரம் வடக்கு, தெற்குப் பகுதியில் உள்ள குளக்கரைகளில் பனை விதைகள் நடப்பட்டன. பனை மரங்களின் அவசியம், பனை மரங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
22-Sep-2025