உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

போடி : போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி 4 ம் ஆண்டு மாணவிகள் சார்பில் கிராம விவசாய அனுபவ திட்டத்தின் கீழ் வனம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. வனப்பகுதியில் மரம் வளர்ப்பதால் மழை அதிகரிப்பு, மண் அரிப்பு தடுப்பு குறித்து மாணவர்களிடம் கல்லூரி மாணவிகள் விளக்கி பேசினர். இதில் மாணவிகள் கிர்த்திகா பானு, கீர்த்தனா சாய், ஞானலிசி, அழகி, அகத்தியா, ஜெயஹரிணி, ஜெனிரோஸ், நிவேதா, பிருந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ