உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

உத்தமபாளையம் : இராயப்பன்பட்டி ஊராட்சி சார்பில், பிளாஸ்டிக், பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உத்தமபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயப்பிரகாசம், மாவட்டத் திட்ட மேலாண்மை அலுவலர் அப்துல் பாஷித், ஊராட்சி செயலர் சுந்தர பாண்டியன், திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர். கடை கடையாக சென்று பிளாஸ்டிக், பாலிதீன் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. பொது மக்கள், ஊராட்சி பணியாளர்கள், துாய்மை காவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி