மேலும் செய்திகள்
விநாயகர் சிலை தயாரிப்பு கட்டுப்பாடுகள் விதிப்பு
19-Aug-2025
தேனி: தேனி விளையாட்டு கழகத்தின் சார்பில், அமெரிக்க பொருட்களை புறக்கணிப்போம்' என்ற தலைப்பில் சுதேசி பொருட்களை பயன்படுத்த வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். செயலாளர் கதிரேசன் பேசுகையில், சுதேசி பொருட்களை பயன்படுத்தும் இந்த விழிப்புணர்வு நாடு முழுவதும் பரவ வேண்டும். அமெரிக்க நாட்டு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.தேனியில் உள்ள நுாற்பாலைகளில் 20 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை மாற அந்நாட்டு பொருட்களை பயன்படுத்த வேண்டாம்,' என்றார். உறுப்பினர்கள் அமெரிக்க தயாரிப்புகளான குளிர்பான பாட்டில்கள் தின்பண்டங்களைகுப்பைத்தொட்டியில் போட்டு எதிர்ப்பு கோஷமிட்டனர்.
19-Aug-2025