உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பக்தர்களுக்கு உதவ அய்யன் செயலி

 பக்தர்களுக்கு உதவ அய்யன் செயலி

சபரிமலை: பக்தர்களுக்கு தேவைப்படும் எல்லா விபரங்களையும் உள்ளடக்கி 'அய்யன்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சபரிமலையின் சிறப்புகள், அவசர உதவி எண்கள் இப்படி பல்வேறு விபரங்கள் இந்த செயலியில் உள்ளது. இன்டர்நெட் இல்லாத இடங்களிலும் இது செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பம்பை, எருமேலி,சன்னிதானம் போன்ற இடங்களில் கிடைக்கும் சேவைகள், பெரு வழிப்பாதையில் உள்ள சேவை மையங்கள், மருத்துவ வசதிகள், கழிவறைகள், குடிநீர் மையங்கள் பற்றிய விவரங்களும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கான தூரம், பக்தர்கள் தேர்ந்தெடுக்கும் வழிகளில் உள்ள முன்னறிவிப்புகள் போன்றவையும் இதில் உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த செயலி கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ