உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பால வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

பால வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே லட்சுமிபுரம் பால வெற்றி விநாயகர் கோயில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, கோ பூஜை உட்பட முதல், 2ம் கால பூஜைகளும், மறு நாளில் விநாயகர் பூஜை, சூரிய கும்ப பூஜை, பூர்ணாஹூதி உட்பட 3, 4 ம் கால யாக பூஜைகளும், எந்திர ஸ்தாபனம், கோபுர கலச ஸ்தாபனம், அஷ்டபந்தனை மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகளும் நடந்தன. மூன்றாம் நாளில் விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, 5ம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளுக்கு பின் ஸ்ரீ பால வெற்றி விநாயகர், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கலசங்கங்களுக்கு புனித நீர் ஊற்றிய பின் தொடர்ந்து மூலவருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை