உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உண்டியல் பணம் திருட்டு

உண்டியல் பணம் திருட்டு

கம்பம்: கம்பம் காந்திநகர் முதல் குறுக்கு தெருவில் வசிப்பவர் கணேசன் மனைவி சூரிய கலா 63, இவர் பெங்களுரூவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர், மே 11 ல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளர். வீட்டிற்குள் இருந்த இரண்டு குத்து விளக்குகள், நான்கு பொங்கல் பானைகள், ஐந்து காமாட்சி விளக்குகள், அலைபேசி, உண்டியல் பணம் ரூ. 5 ஆயிரத்தை திருடி சென்றுள்ளார். வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து உறவினர்கள் சூரிய கலாவிற்கு தகவல் தந்துள்ளனர். புகாரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை