உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாரில் தகராறு: இருவர் கைது

பாரில் தகராறு: இருவர் கைது

தேனி: தேனி, குன்னுார் மேலத்தெரு சவுந்திரபாண்டி 40. இவர் தேனி உழவர் சந்தை அருகே உள்ள பாரில் மேலாளராக உள்ளார். நேற்று முன்தினம் பாருக்கு வந்த அல்லிநகரம் தெற்குத்தெரு சேதுமூர்த்தி 24, கக்கன்ஜி காலனி பாலமுருகன் 27, ஓசியாக மதுபாட்டில் கேட்டனர். தர மறுத்த மேலாளரை தாக்கி, சேர், டேபிளை சேதப்படுத்தினர். பீர்பாட்டிலால் சேதுமூர்த்தி மேலாளரை குத்த முயன்றார். சம்பவம் அறிந்து சென்ற போலீசாரிடமும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !