உள்ளூர் செய்திகள்

பட்டிமன்றம்

பெரியகுளம்: பெரியகுளத்தில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நவராத்திரி நிறைவு விழாவில், 'வாழ்க்கையின் மகிழ்ச்சி நேற்றைய நினைவுகளா? நாளைய கனவுகளா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நேற்றைய நினைவுகளே என்ற தலைப்பில் ஆசிரியர் ராஜ்குமார், பேச்சாளர் கவிதா ஜவஹர் மற்றும் நாளைய கனவுகளே என்ற தலைப்பில் பேராசிரியைகள் சங்கீத்ராதா, ரேவதி சுப்புலட்சுமி பேசினர். இரு தரப்பிலும் முல்லை பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக், கவிஞர் கண்ணதாசன், பட்டிமன்றம் நடுவர் சாலமன் பாப்பையா பல்வேறு சாதனையாளர்களை மேற்கோள் காட்டி வாதிட்டனர். வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு நாளைய கனவுகளே என நடுவர் ராஜா தீர்ப்பளித்தார். ஏற்பாடுகளை தமிழ் இலக்கிய மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ