உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்டு யானைகளால் பீன்ஸ் தோட்டம் சேதம்

காட்டு யானைகளால் பீன்ஸ் தோட்டம் சேதம்

மூணாறு: மூணாறு அருகே குண்டளை எஸ்டேட், புதுக்கடி பகுதியில் பட்டர் பீன்ஸ் தோட்டங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின. அப்பகுதியை சேர்ந்த சம்பத், விஜயகுமார் ஆகியோர் தோட்டங்களில் பட்டர் பீன்ஸ் சாகுபடி செய்தனர். அவை அறுவடைக்கு தயாராக இருந்தது. அப்பகுதியில் முகாமிட்டு இருந்த நான்கு காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவில் இருவரது தோட்டங்களில் நுழைந்து பட்டர் பீன்ஸ்களை பறித்து தின்றதுடன் தோட்டங்களை முற்றிலுமாக சேதப்படுத்தின. தோட்டங்களை விட்டு நேற்று காலை 6:00 மணிக்கு யானைகள் வெளியேறி காட்டிற்குள் சென்றன. ரூ.1.60 லட்சம் மதிப்பில் பட்டர் பீன்ஸ் சேதமடைந்ததாக இருவரும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !