விழாக்கள் இல்லாததால் வெற்றிலை விலை குறைவு
கம்பம்:திருவிழா, விசேஷங்கள் இல்லாததால் வெற்றிலை விலை குறைந்து வருகிறது.தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கி கம்பம் பள்ளத்தாக்கில் ஒரு மாதமாக தொடர்ந்து சாரல் பெய்து வருகிறது. வானம் மேக மூட்டமாக உள்ளதால் வெயில் முழுமையாக இல்லாத நிலை உள்ளது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சின்னமனூர், கம்பம் வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள வெற்றிலை கொடிக் கால்களில் கொடி கட்டுவது, கீரை வெட்டுவது உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வெற்றிலை பறிக்கும் பணி மட்டும் நடக்கிறது. மழை விட்டு பெய்வதால் வரத்தும் ஒரே சீராக உள்ளது. விலை கிலோவிற்கு ரூ.20 வரை குறைந்துள்ளது.சாகுபடியாளர்கள் கூறுகையில் , ' மழை விட்டு விட்டு பெய்வதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வரத்தும் சீராக உள்ளது. ஆனால் கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் இல்லாததால் விற்பனை குறைந்துள்ளது. கிலோ ரூ.300 விற்ற வெள்ளை வெற்றிலை ரூ.280 க்கும், ரூ-200 விற்ற கருப்பு வெற்றிலை ரூ.180 என்றும் விலை குறைந்துள்ளது என்றனர்.