உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொடர் வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு

தொடர் வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு

சின்னமனுார் : தேனி மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடி சின்னமனுார், சீலையம்பட்டி, மார்க்கையன்கோட்டை, பெரியகுளம், சில்வார்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டியில் நடந்து வருகிறது. குறிப்பாக கறுப்பு வெற்றிலை சின்னமனூர் வட்டாரத்திலும், வெள்ளை வெற்றிலை பெரியகுளம் வட்டாரத்திலும் சாகுபடியாகிறது. வெற்றிலை விலை கறுப்பு வெற்றிலை கிலோ ரூ.180 க்கு விற்பனையானது. தற்போது ரூ.210 என உயர்ந்துள்ளது. வெள்ளை வெற்றிலை கிலோ ரூ.280ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. வெற்றிலை முன்னோடி சாகுபடியாளர் ரவி கூறியதாவது: கொடிக்கால்களில் கொடிகள் அதிகம் வளர்ந்துவிட்டது. எனவே கொடிகளை மடக்கி கட்டும் பணிகள் நடந்து வருகிறது. 3 மாதங்களுக்கு ஒரு முறை கொடிகளை வளைத்து கட்டுவது வழக்கமாக நடப்பதுதான். அந்த சமயங்களில் வரத்து குறைவதும், விலை அதிகரிப்பதும் சாதாரணமாக நடப்பதுதான்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை