உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வரிகுறைப்பு பா.ஜ., கொண்டாட்டம்

வரிகுறைப்பு பா.ஜ., கொண்டாட்டம்

தேனி: குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்காக தேனி நேருசிலை அருகே பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். வரி குறைப்பு தொடர்பாக பொதுமக்கள், கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வில் அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் சூரியநாராயணன் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாநில துணைத்தலைவர் அஜித்குமார், நகரதலைவர் ரவிக்குமார், நிர்வாகிகள் பெரியசாமி, விஜயகுமார், மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !