உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லோக்சபா தொகுதிக்கு 3 பேர் கொண்ட உத்தேச வேட்பாளர் பட்டியல் தயார் பா.ஜ. பெருங் கோட்ட பொறுப்பாளர் தகவல்

லோக்சபா தொகுதிக்கு 3 பேர் கொண்ட உத்தேச வேட்பாளர் பட்டியல் தயார் பா.ஜ. பெருங் கோட்ட பொறுப்பாளர் தகவல்

கம்பம்: லோக்சபா தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி தொகுதிக்கு 3 பேர் கொண்ட உத்தேச பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது என பா..ஜ. மதுரை பெருங் கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள் கூறினார்.நேற்று கம்பத்தில் அவர் கூறியதாவது :ஆளும் தி.மு.க. விற்கு போட்டியாக பா.ஜ., வளர்ந்துள்ளது. நோட்டா கட்சி என்பது மாறி 2வது கட்சியாக வளர்ந்தள்ளது. அனைத்து லோக்சபா தொகுதியிலிருந்தும் கட்சி நிர்வாகிகள் தலா 150 பேரை அழைத்து ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதி வாய்ந்த 3 உத்தேச வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியல் டில்லி தலைமைக்கு அனுப்பி உள்ளோம்.தி.மு.க அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மத்திய அரசு நிதி தரவில்லை என்று பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ரூ. 11 லட்சம் கோடி வரை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. அதை சரியாக பயன்படுத்தவில்லை. மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் விஷன் டாக்குமெண்டில் இருந்த கோரிக்கைகளை பெரும்பாலும் நிறைவேற்றியுள்ளது. வரும் தேர்தலிலும் விஷன் டாக்குமெண்ட் தயாரித்து மூன்றாவது முறையாக பா.ஜ. ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்.கண்ணகி கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் சென்று வழிபட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகர தலைவர் ஈஸ்வரன், மாவட்ட பொதுச் செயலாளர் தங்க பொன் ராஜா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ