உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

ஆண்டிபட்டி: மயிலாடும்பாறை அருகே மலைக்கிராமத்தில் பழுதடைந்த ரோட்டை சரி செய்ய தடை ஏற்படுத்தும் வனத்துறையை கண்டித்து பா.ஜ.,வினர் செங்குளம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். செங்குளத்தில் இருந்து நரியூத்து, ஆலந்தூர் வழியாக மூலக்கடை கிராமத்திற்கு செல்லும் ரோடு பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த ரோட்டை புதுப்பிக்க வனத்துறையினர் தடை ஏற்படுத்துகின்றனர். இதனால் இக்கிராம மக்கள் விளைபொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். வனத்துறையை கண்டித்து செங்குளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.,தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமை வகித்தார். தேனி மாவட்ட செயலாளர் காமராஜ், ஒன்றிய தலைவர் ராஜா, கட்சி நிர்வாகிகள் லிங்கப்பன், கருப்பசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை