உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ., சார்பில், டில்லியில் பிரதமர் மோடி இல்லம் முன் போராட்டம் நடத்திய லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், நிர்வாகிகள் மலைச்சாமி, வினோத், ரவிக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ராகுல் படத்தை எரிக்க முயன்றனர். போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராகுல் உருவ பொம்மைய எடுத்து வந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !