உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அம்பேத்கர் பற்றி பா.ஜ.,விழிப்புணர்வு

அம்பேத்கர் பற்றி பா.ஜ.,விழிப்புணர்வு

தேனி: பா.ஜ., தென் மண்டல பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள் தெரிவித்ததாவது:அம்பேத்கர் பிறந்த நாள்விழாவையொட்டி ஏப்.14 முதல் ஏப். 25 வரை பா.ஜ., வின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் உள்ள அம்பேத்கரின் சிலைகள் சீரமைத்து சுத்தப்படுத்த வேண்டும். அவரின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்கள், லோக்சபாவில் அவர் ஆற்றிய உரைகள். அவர் பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி பா.ஜ.,வில் உள்ள பல்வேறு பிரிவு நிர்வாகிகள், இப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ