உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடி ஜ.கா.நி., மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

போடி ஜ.கா.நி., மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

போடி : போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன் தலைமையில் நடந்தது. செயலாளர் இனாயத் உசேன்கான் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் பங்கேற்று 10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேதுராம், காளிமுத்து, மாரிமுத்து, முருகன், மணிகண்டன், சுப்பிரமணியம் ராமராஜ், சண்முக வரதராஜ், பள்ளி துணை முதல்வர் சித்ராதேவி, ஜ.கா.நி.. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை