உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தனியார் ஓட்டலுக்கு வெடி குண்டு மிரட்டல்

தனியார் ஓட்டலுக்கு வெடி குண்டு மிரட்டல்

மூணாறு: மூணாறு அருகே விரிபாறை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீசார் சோதனையிட்டனர்.மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட விரிபாறை பகுதியில் வனத்தினுள் தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது. அங்கு பெரும்பாலும் வி.ஐ.பி.க்கள் தங்கிச் செல்வதுண்டு. இந்த ஓட்டலில் ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஓர்பன் குடும்பத்தினருடன் ஜன.12, 13 ஆகிய நாட்களில் தங்கினார்.இந்நிலையில் அந்த ஓட்டலில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ- மெயிலில் தகவல் வந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். மூணாறு போலீசார் ஓட்டலில் முழுமையாக சோதனையிட்டனர். அதில் வெடி குண்டு எதுவும் சிக்காததால், புரளி என தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை