உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கிராமங்கள் வாரியாக அ.தி.மு.க., சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட பூத் கமிட்டி செயல்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆண்டிபட்டி ஒன்றியம் சித்தார்பட்டி, தெப்பம்பட்டி, டி.அழகாபுரி, பாலக்கோம்பை, சக்கம்மாபட்டி, கதிர்நரசிங்கபுரம், பிச்சம்பட்டி கிராமங்களில் பூத்கமிட்டி நிர்வாகிகளுடன் நடந்த கூட்டங்களில் மாவட்டச் செயலாளர் ராமர், தொகுதி பொறுப்பாளர் ரதிமீனா சேகர், ஒன்றியச் செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் மதியரசன், ஒன்றியப் பொருளாளர் செல்வம், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் வடிவேல், மாவட்ட பிரதிநிதி கவிராஜன், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் பாண்டியன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலாளர் ராஜபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி