உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பி.எஸ்.என்.ஏ., தொழில்நுட்ப அறக்கட்டளை தொடக்க விழா

பி.எஸ்.என்.ஏ., தொழில்நுட்ப அறக்கட்டளை தொடக்க விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் பி.எஸ்.என்.ஏ., தொழில்நுட்ப அறக்கட்டளை (பிரிவு 8 நிறுவனம்) தொடக்க விழா நடந்தது. கல்லுாரித் தலைவர் தனலட்சுமி அம்மாள், முதன்மைத் தலைவர் ரகுராம் ,கல்லுாரியின் அறங்காவலர் சூர்யா ரகுராம் தலைமை வகித்தனர். முதல்வர் வாசுதேவன் வரவேற்றார். தமிழ்நாடு தொழில்முனைவோர் திட்ட இயக்குநர் சிவராஜா ராமநாதன், இண்டியா எமிரேட்ஸ் என்.பி.டி., நிறுவன ஓய்வு அலுவலர் சேதுராமன் சாத்தப்பன் பேசினர். இதில் தொழில்நுட்ப அறக்கட்டளையை நிர்வகிக்க உள்ள ைஹதராபத்தில் உள்ள டி-ஹப் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டு மேலாளர் பயிற்சி பெற்றவர்களுக்கு சேதுராமன் சாத்தப்பன் சான்றிதழ் வழங்கினார். இதையொட்டி நேற்று முன்தினம் (ஆக. 8) பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரி ,பெங்களூருவை சேர்ந்த சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங் நிறுவனத்துடன் இணைந்து இணைய உலகம் மேம்பட்ட சிறப்பியல் மையம் தொடக்க விழா நடந்தது. பெங்களூரு சி-டிஏசி நிறுவனத்தில் பணியாற்றும் அறிஞர் ஸ்ரீகிருஷ்ணா பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை