உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பட்டாசு வெடித்த தகராறு பஸ் கண்டக்டருக்கு அடி

பட்டாசு வெடித்த தகராறு பஸ் கண்டக்டருக்கு அடி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரசு பஸ் கண்டக்டர் பிரகாஷ் 35. இவரது உறவினர் அன்புச் செல்வம் தீபாவளியன்று அரசு ஆரம்ப பள்ளி அருகே பட்டாசு வெடித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதே பகுதி தண்ணீர்தொட்டி தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் 45. அன்புச்செல்வத்தை அவதூறாக பேசியுள்ளார். இதனை கேட்ட பிரகாஷை, சுரேஷ்குமார், இவரது உறவினர்கள் பாக்கியலட்சுமி, கண்ணாத்தாள், மாரீஸ், காமாட்சி, மனோஜ், சஞ்சய், பிரேம் ஆகியோர் அடித்துள்ளனர். சண்டையை விலக்க வந்த அன்புச் செல்வத்திற்கு கத்தி குத்து விழுந்தது. தேவதானப்பட்டி போலீசார் சுரேஷ்குமார் உட்பட 8 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ