உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விபத்தை தடுக்க பஸ் மின் கம்பங்களில் மோதி நிறுத்தம்

விபத்தை தடுக்க பஸ் மின் கம்பங்களில் மோதி நிறுத்தம்

கம்பம் : கம்பத்தில் இருந்து நெடுங்கண்டத்திற்கு நேற்று காலை 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்றது. கம்பமெட்டு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, கம்பமெட்டிலிருந்து கம்பம் நோக்கி வந்த டிப்பர் லாரி, பஸ் மீது மோதுவது போல் வேகமாக வந்துள்ளது. இதில் பயந்த பஸ் டிரைவர் பாலமுருகன் விபத்தை தவிர்க்க பஸ்சை இடது புறம் திருப்பியுள்ளார். அப்போது இடது புறம் ரோட்டோரம் இருந்த மின்கம்பங்களின் மீது பஸ் மோதியதில் 5 மின்கம்பங்கள் சேதமடைந்தன. மின்கம்பத்தில் பஸ் மோதி நின்றது. பஸ் டிரைவரின் சாமார்த்தியத்தால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை