கிக்தொழிலாளர்களுக்கு பெரியகுளத்தில் முகாம்
தேனி: பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் இன்று(நவ.,22), ஆன்லைன் மூலம் மின்சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், உணவுகள் டெலிவரி பணி சார்ந்த 'கிக்' தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது என தொழிலாளர் உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் தெரிவித்துள்ளார். பதிவு செய்ய வருபவர்கள் அலைபேசி எண் இணைக்கப்பட்ட ஆதார், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.