மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது
16-Oct-2025
தேனி: பெரியகுளம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தேவாரம் வடக்குத்தெரு பிரபாகரனை தென்கரை போலீசார் கடந்த செப்., 25ல் கைது செய்தனர். அவரிடம் 3.600 கிலோ கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சினேஹா பிரியா கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார். கலெக்டர் உத்தரவில் பிரபாகரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார். மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை ரேஷன் அரிசி கடத்திய 4பேர் உட்பட 61 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16-Oct-2025