மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி மாயம்
07-Jun-2025
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டியில் நேற்று அதிகாலை கட்டுப்பாடு இழந்த கார் பூட்டிய கடைக்குள் பாய்ந்தது. அதிஷ்டவசமாக காரில் சென்றவர்கள் காயம் இன்றி தப்பினர்.பெரியகுளத்தை சேர்ந்தவர் கண்ணன் 45, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் காரில் சென்று விட்டு திரும்பினார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஆண்டிபட்டி வழியாக சென்றபோது ரோட்டில் குறுக்கே சென்ற நாய் மீது மோதுவதை தவிர்க்க காரை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த கார் பூட்டிய கடைக்குள் பாய்ந்ததாக டிரைவர் தெரிவித்தார். அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் இல்லை. டீக்கடையும் பூட்டப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் இல்லை. காரை ஓட்டிச்சென்ற கண்ணன் லேசான காயம் அடைந்தார். காரில் இருந்த மற்றவர்களும் காயம் இன்றி தப்பினர். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
07-Jun-2025