கார் டயர் திருட்டு
மூணாறு,: மூணாறு அருகே நயமக்காடு எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனில் வீட்டின் அருகே ரோட்டில் நிறுத்தி இருந்த சுற்றுலா காரின் டயர் மாயமானது. அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுலா கார் டிரைவர் ராஜா நேற்று முன்தினம் ஓட்டம் முடிந்து இரவில் வழக்கம் போல் தனது காரை வீட்டின் அருகே ரோட்டில் நிறுத்தி இருந்தார். நேற்று காலை சென்று பார்த்தபோது காரின் பின்புறத்தில் ஒரு டயர் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். நான்கு டயர்களின் நட்டுகளை கழற்றிய மர்ம நபர்கள் ஒரு டயர் மட்டும் எளிதில் கழன்றதால் மூன்று டயர்கள் தப்பின. மூணாறு போலீசில் ராஜா புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.