உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரங்கள் அகற்றுவதற்கு எதிராக வழக்கு

மரங்கள் அகற்றுவதற்கு எதிராக வழக்கு

மதுரை : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சித்தையகவுண்டன்பட்டி கோவிந்தராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு: பூமிதான வாரியத்திற்கு சொந்தமான நிலம் சித்தையகவுண்டன்பட்டியில் உள்ளது. அதிலுள்ள மரங்களை நிலத்திற்கு சம்பந்தமில்லாத ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தை மீட்க பூமிதான வாரிய தலைவர், கலெக்டர், ஆண்டிபட்டி தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் செந்தில் குமரய்யா ஆஜரானார். அரசு பிளீடர் திலக்குமார்,'அது பூமிதான நிலமா அல்லது பட்டா நிலமா என ஆய்வு செய்யப்படும். தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். நீதிபதிகள்,'அளவீடு செய்து செப்.25 ல் தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ