மனைவியை தாக்கிய கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு
ஆண்டிபட்டி: அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த சுசிலா 24, என்பவருக்கும் அரண்மனைபுதூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிரச்சனையால் தற்போது சுசிலா கணவரை பிரிந்து அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இம்மாதம் 12ம் தேதி செல்வகுமார் மற்றும் அவரது உறவினர்கள் சுசிலா இருக்கும் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது குடும்பத்தையும் அசிங்கமாக பேசி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சுசிலா அவரது தந்தை, தாய், மாமா ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர்.காயம் அடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சுசிலா புகாரில் க.விலக்கு போலீசார் செல்வகுமார், அவரது உறவினர்கள் மாலதி, தன்னாசி, மணிமேகலை, ராஜபாண்டியன், மாரியம்மாள், மணிகண்டன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.