மேலும் செய்திகள்
ரூ.10 லட்சம் மோசடி வழக்கு டில்லியில் பெண் கைது
20-Jun-2025
ஆண்டிபட்டி:தங்களது நிலத்தை விற்பதாக கூறி மதுரைமாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த தேவராமனிடம் ரூ.10 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை தம்பதி மீது ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை கொடிக்குளம் வவ்வால் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராமன் 52. இவரிடம் சென்னை பெரம்பூர் பேரக்ஸ் பகுதியைச் சேர்ந்த ராகிணி , அவரது கணவர் நக்கீரன் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி புள்ளிமான்கோம்பை அருகே தங்களுக்கு புஞ்சை நிலம் இருப்பதாக கூறி, அந்த நிலத்தை தேவராமனுக்கு பத்திரம் முடித்து தருவதாக ரூ.10 லட்சம் முன் பணம் பெற்று ஒப்பந்தம் செய்துள்ளனர். 40 நாளில் கிரையம் முடித்து தருவதாக தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் 2023 ஆக.7 ல் அதே நிலத்தை ராகிணி, நக்கீரன் அவர்களின் மகன் மற்றும் மகளின் பெயர்களில் பத்திரம் எழுதி வைத்தனர். இதனை அறிந்த தேவராமன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் கொலை மிரட்டல் விடுவதாக தேவராமன் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சென்னை தம்பதி மீது ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
20-Jun-2025